/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நிழல் இல்லா நாள்'; அரிய அறிவியல் நிகழ்வு
/
'நிழல் இல்லா நாள்'; அரிய அறிவியல் நிகழ்வு
ADDED : ஏப் 19, 2025 11:39 PM

கோவை: கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், 'நிழல் இல்லா நாள்' குறித்த செயல் விளக்க நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர், இந்த அரிய நிகழ்வை நேரில் கண்டு ரசித்தனர்.
பொதுவாக, சூரியன் தினமும் கிழக்கில் உதித்து, உச்சிபொழுதில் தலைக்குமேலே வந்து, மாலையில் மேற்கில் மறைவது வழக்கம். ஆனால், ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில், இரண்டு நாட்களில் மட்டும், சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும்.
அந்த நாட்களில், பகல் உச்சியில் சூரியன் நேராக மையத்தில் இருப்பதால், நிலத்தில் உள்ள பொருட்களின் நிழல் விழுவதில்லை.
இந்த ஆண்டு நேற்று மதியம் 12:21 மணிக்கு சூரியன் நேராகத் தலைக்குமேல் வந்ததால், நிழல் இல்லாத நிலையில், பொருட்கள் காணப்பட்டன. இதை, 'நிழல் இல்லா நாள்' அல்லது 'பூஜ்ய நிழல் நாள்' என்று குறிப்பிடுவர்.
இந்த அரிய நிகழ்வு குறித்து, கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.