ADDED : அக் 21, 2024 06:28 AM

வால்பாறை, : வால்பாறைக்கு, சுற்றுலா பயணியர் வருகை குறைந்ததால், படகு சவாரி வெறிச்சோடி காணப்படுகிறது.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகம் உள்ளது. அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் காட்சிமுனை பகுதி, நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறையில் ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், பகலில் வெயிலும், இடையிடையே சாரல்மழையும் பொழிகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது.
தற்போது, சுற்றுலா பயணியர் வருகை குறைந்துள்ளதால், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, நல்லமுடி காட்சி முனைப்பகுதி உள்ளிட்ட பகுதிகள், வெறிச்சோடி கிடக்கிறது.