/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரவணம்பட்டி பகுதியில் ரூ.30 லட்சத்துக்கு தனி வீடு
/
சரவணம்பட்டி பகுதியில் ரூ.30 லட்சத்துக்கு தனி வீடு
ADDED : ஏப் 26, 2025 11:28 PM
கோவை: கே.ஆர்.பிராப்பர்ட்டிஸ் நிறுவனம், சரவணம்பட்டி அருகே  கோவில்பாளையத்தில்,  'ஹைலேண்ட்' என்ற பெயரில், புதிய வீட்டு மனை திட்டத்தை தொடங்கியுள்ளது. டீ.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற இந்த திட்டத்தில், ஒரு பெட்ரூம் வீடு ரூ.30 லட்சம் முதலும், இரண்டு பெட்ரூம் வீடு ரூ.35 லட்சம் முதலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த லே-அவுட் முழுவதும் சுற்றுச்சுவர்,  24 மணி நேர  செக்யூரிட்டி,  சோலார் மின்வசதி, தார் ரோடு, தெருவிளக்கு வசதி உள்ளது. இரண்டரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, அத்திக்கடவு குடிநீர் தொட்டியிலிருந்து, ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது.
தவிர, சிறுவர் பூங்கா, திறந்தவெளி திரையரங்கம், கால்பந்து மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் வங்கி கடன் எளிதாகவும், உடனடியாகவும் கிடைப்பதாக, கே.ஆர்.பிராப்பர்ட்டிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார். விபரங்களுக்கு,  90030 04567, 90030 00123 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

