/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
/
ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
ADDED : பிப் 22, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், 1,451 தெரு விளக்குகள் அமைக்க ஒரு பேக்கேஜ், 6,250 தெரு விளக்குகள் அமைக்க ஒரு பேக்கேஜ் என, பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடந்தது.
அப்போது, தெரு விளக்குகள் அமைக்கும் பணியில் ஏற்பட்ட, தொய்வுக்கு காரணமான ஒப்பந்ததாரர் ஸ்ரீ ராணா என்ற நிறுவனத்துக்கு, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கமிஷனர் உத்தரவிட்டார்.