/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.நாகூர் குடிநீர் பிரச்னையை சரி செய்யுங்க! ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
/
ஏ.நாகூர் குடிநீர் பிரச்னையை சரி செய்யுங்க! ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
ஏ.நாகூர் குடிநீர் பிரச்னையை சரி செய்யுங்க! ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
ஏ.நாகூர் குடிநீர் பிரச்னையை சரி செய்யுங்க! ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2024 11:34 PM

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி ஏ.நாகூரில் குடிநீர் பிரச்னையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வடக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
பிரபு (அ.தி.மு.க.,): கொல்லப்பட்டி ஊராட்சியில், காளியாபுரம் குட்டை அருகே புதியதாக பொது கழிப்பிடம் கட்டப்பட வேண்டும்.காளியாபுரம் - ஆவலப்பம்பட்டி ரோட்டில் கொல்லப்பட்டி அருகே ரோடு மோசமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சிவக்குமார் (அ.தி.மு.க.,): ராமபட்டணம் - தாவளம் ரோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற வேண்டும். நல்லுாத்துக்குளி மகளிர் கழிப்பிடம் அருகே செல்லும் ரோடு, பி.ஏ.பி., கால்வாய் நீர் செல்வதால் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
தங்கராஜ் (தி.மு.க.,): நெகமம் - என்.சந்திராபுரம் ரோட்டை அகல்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.சந்திராபுரம் - பல்லடம் ரோடு மோசமாக உள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு, 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை.
நாகராஜ் (அ.தி.மு.க.,): ஏ.நாகூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்காக மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுவரை அந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. மேலும், தொகுப்புவீடுகள் பழுதடைந்து கிடக்கின்றன. இதை சீரமைக்க வேண்டும்.
ஜோத்தம்பட்டி - ஆவலப்பம்பட்டி ரோடு, ஜோத்தம்பட்டி - அடிவள்ளி ரோடு, மூலனுார் - சின்ன நெகமம் ரோடுகள் சேதமாக உள்ளன. இவற்றை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன்குமார் (அ.தி.மு.க.,): ஐந்து எச்.பி., மின்சார தொழிற்சாலைகளுக்கு லைசென்ஸ் பெற ஒன்றிய தீர்மானம் பெறுவதில்லை. இனி வருங்காலங்களில் ஒன்றிய தீர்மானம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஒன்றிய அலுவலகத்தில் அரசுத்துறை இல்லாத நிறுவனங்களுக்கு அறை ஒதுக்க கூடாது. கோவை கோகனெட் புரோடியூசர் கம்பெனி என்ற நிறுவனத்துக்கு இடம் தரக்கூடாது. இது அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.