/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருகிறது நான்கு நாள் தொடர் விடுமுறை; 70 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்

ADDED : ஜன 24, 2024 01:35 AM
கோவை;கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து, மருதமலை, பழனி, திருவண்ணாமலை மற்றும் வெளியூர்களுக்கு, நாளை முதல், 28ம் தேதி வரை, 70 சிறப்பு பஸ்கள் இயக்க இருப்பதாக, அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.
தைப்பூசத் திருவிழா நாளை (25ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் (26ம் தேதி) குடியரசு தின விழா, 27ம் தேதி (சனி), 28ம் தேதி (ஞாயிறு) என, தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது.
அதனால், குடும்பத்தோடு பலரும் வெளியூர் செல்வர். இவர்களது வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாளை (25ம் தேதி) முதல் வரும், 28ம் தேதி வரை கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மருதமலை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்துார், மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டிக்கு செல்லவும், மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்படும் வழித்தட பஸ்களுடன், கூடுதலாக, 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.