தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இடைநிற்றல் தவிர்க்க ‘புதிய தொடக்கம்’ முகாம்

இடைநிற்றல் தவிர்க்க ‘புதிய தொடக்கம்’ முகாம்

இடைநிற்றல் தவிர்க்க ‘புதிய தொடக்கம்’ முகாம்


UPDATED : நவ 27, 2026 05:04 PM

ADDED : நவ 27, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 05:04 PM ADDED : நவ 27, 2026 05:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில்ல, பள்ளி செல்லாத மற்றும் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான முகாம் நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 'புதிய தொடக்கம்' என்னும் திட்டத்தின் கீழ், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடை நின்ற மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, பள்ளிப்படிப்பை நிறுத்தியதற்கான காரணங்களை கேட்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து, வட்டார அளவில் முகாம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘புதிய தொடக்கம்’ முகாம் நடந்தது.

இதில், வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை, போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில், 22 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் அறிவுரைப்படி கூடுதலாக முகாம் நடத்தி, அதன் வாயிலாக பல குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி வழங்கப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

வால்பாறை



வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜாராம் வரவேற்றார்.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் நிறைமதி, வட்டார கல்வி அலுவலர் செல்வி, சப்–இன்ஸ்பெக்டர் வடிவேல், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கீர்த்தி மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும், போதை பொருட்கள் ஒழிப்பு, கல்வி கற்பதின் அவசியம் குறித்து பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர்கள், பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us