தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புதிய சிந்தனையை வளர்க்க அழைப்பு

புதிய சிந்தனையை வளர்க்க அழைப்பு

புதிய சிந்தனையை வளர்க்க அழைப்பு


UPDATED : நவ 27, 2026 05:04 PM

ADDED : நவ 27, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 05:04 PM ADDED : நவ 27, 2026 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மண்டல அறிவியல் மையத்தில் செயல்பட்டு வரும் 'இன்னோவேஷன் ஹப்' அமைப்பில் உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவுச் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் இந்த ஹப் செயல்பட்டு வருகிறது.

இதில், ஆறு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு உறுப்பினர் கட்டணம் ரூ.250, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.500, தனியார் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.1,000. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.1,500.

உறுப்பினர் சேர்க்கைக்கான கடைசி நாள் டிச.15. விவரங்களுக்கு 85239 09178 என்ற எண்ணில் பேசலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us