/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நண்பரின் கார் விபத்தில் சிக்கியது: வாலிபர் விரக்தியில் தற்கொலை
/
நண்பரின் கார் விபத்தில் சிக்கியது: வாலிபர் விரக்தியில் தற்கொலை
நண்பரின் கார் விபத்தில் சிக்கியது: வாலிபர் விரக்தியில் தற்கொலை
நண்பரின் கார் விபத்தில் சிக்கியது: வாலிபர் விரக்தியில் தற்கொலை
ADDED : ஜன 08, 2024 01:22 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நண்பரின் கார் விபத்தில் சிக்கியதால், விரக்தியடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி அருகே ராமபட்டணத்தை சேர்ந்தவர் ஜீவா, 27. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கட்டட வேலைக்கு சென்று வந்தார். இவர், தனக்கு பெண் பார்க்க குடும்பத்துடன் செல்வதாகக்கூறி அதே பகுதியைச்சேர்ந்த சதீஷ் என்பவரிடம் காரை வாங்கிச் சென்றார்.
கடந்த, 4ம் தேதி காலை ஜீவா காரை எடுக்க வந்தார். அப்போது, சதீஷ் தானும் வருவதாக கூறி டீ குடிக்க கடைக்கு சென்றார்.
அவர் வருவதற்குள், ஜீவா, காரை எடுத்துக்கொண்டு மண்ணுார் - ராமபட்டணம் செல்லும் வழியில் அதிவேகமாக சென்று வாகனத்தை திருப்ப முயற்சி செய்த போது, வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், வாகனத்துக்கு மட்டும் சேதம் ஏற்பட்டது. சம்பவம் அறிந்து சதீஷ் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது, வாகனத்துக்கு, 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால் ஜீவா, 35 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
மீதித்தொகையை நேற்று தருவதாக தெரிவித்த நிலையில், கடந்த 5ம் தேதி சதீஷ், ஜீவாவை தொடர்பு கொண்ட போது, மொபைல்போனை சுவிட்ச் ஆப் என வந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஜீவா துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.