/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிரை கொண்டாடி மகிழும் சங்கமம்
/
மகளிரை கொண்டாடி மகிழும் சங்கமம்
ADDED : ஏப் 04, 2025 11:54 PM
கோவை; அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், 'அனைத்து மகளிர் சங்கமம்' எனும் தலைப்பில் மகளிர் தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. விழா, வடவள்ளி பேருந்து நிலையம் எதிரில் உள்ள சக்தி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடக்கிறது.
காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை ஆடல், பாடல் என பெண்கள் கொண்டாடி மகிழ பல்வேறு கலை நிகழ்வுகள் நடக்கின்றன. சாதனைப் பெண்கள் பலர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
'நமது இலக்கு...தொட்டுவிடும் துாரம்தான்', 'பெண்கள் நமது கண்கள்', 'வளரிளம் பெண்களின் பெற்றோருக்கு', 'சொல் குறைத்து செயல் பெருக்கு' போன்ற, பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை நடக்கிறது.
இத்துடன், அகில பாரத பிராமணர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வாசன் ஐ கேர் நிறுவனம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம், பாரம்பரிய அறுவை உணவு விருந்தும் நடக்கிறது.

