/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : பிப் 09, 2024 11:49 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு, இலக்கிய மன்ற நிறைவு மற்றும் ஆண்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது.
இதில், விளையாட்டு போட்டியில், 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். கவிஞர் சுடர்விழி பேசினார்.
பேரூராட்சி தலைவர் கதிர்வேல், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) ராதிகா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது.