/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு கோவையில் நாளை பெருவிழா
/
மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு கோவையில் நாளை பெருவிழா
ADDED : அக் 30, 2025 11:29 PM
கோவை:  கோவை அரன்பணி அறக்கட்டளை சார்பில், திருமுறைகண்ட சோழர் மாமன்னர் ராஜராஜ சோழனின் பெருமையை போற்றும் விழா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் நாளை (நவ. 1) காலை 9 மணிக்கு நடக்கிறது.
திருவள்ளுவர் ஆண்டு 1016 முதல் 1043 வரை, 27 ஆண்டுகள் மட்டுமே ராஜராஜ சோழன் ஆட்சி புரிந்திருந்தாலும், தமிழக வரலாற்றின் பொற்காலமாக போற்றப்படுகிறது. சைவத்தில் திளைத்த ராஜராஜர் தனது ஆட்சியில் இலக்கியம், கலை, கட்டடக்கலை, ராணுவம், நீர் மேலாண்மை, உழவாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை தந்தார். அவரது ஆட்சியின் வெளிப்பாடாக திகழும் தஞ்சை பெரிய கோயில், இன்றளவும் உலகம் வியக்கும் சான்றாக நிற்கிறது.
அவரை போற்றும் விழா நாளை காலை 9 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்குகிறது. திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமை வகிக்கிறார். தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு ஆசியுரை வழங்குகிறார். கற்பகம் நிகர்நிலை பல்கலை வேந்தர் வசந்தகுமார், தஞ்சாவூர் தமிழ்ச் சங்க தலைவர் தெய்வநாயகம் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
அரன்பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன் கருத்துரையும், காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன் விழாப்பேருரையும் ஆற்றுகின்றனர். மாமன்னர் ராஜராஜர் விருது சுவாமிநாதன், செந்தில், சண்முகம், தேவகி, மணிகண்டன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

