/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அடுத்த சந்ததி வாழ பசுமையான பூமி'
/
'அடுத்த சந்ததி வாழ பசுமையான பூமி'
ADDED : ஜூலை 13, 2025 08:51 PM
அன்னுார்; மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், தமிழக நெடுஞ்சாலை துறை, லட்சுமி மில்ஸ் மற்றும் கோவில்பாளையம் ரத்தினம் கல்லுாரி சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா எல்லப்பாளையத்தில் நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனபாலன் பேசுகையில், ''வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். பிறந்தநாள், திருமணநாள் என குறிப்பிட்ட நாட்களை தேர்ந்தெடுத்து மரக்கன்று நட்டு பராமரிக்கலாம். நமது அடுத்த சந்ததிக்கு பசுமையான பூமியை விட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது,'' என்றார்.
வேம்பு, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த, 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அறிவழகன், ரத்தினம் குளோபல் டிப்ஸ் வளாகத் தலைவர் குணசேகரன், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், ஜி.கே.டி., அறக்கட்டளை மேலாளர் விஜயன் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.