/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'யூ டர்ன்' பகுதியில் அபாயம்: சிக்னல் இருந்தும் பயனில்லை
/
'யூ டர்ன்' பகுதியில் அபாயம்: சிக்னல் இருந்தும் பயனில்லை
'யூ டர்ன்' பகுதியில் அபாயம்: சிக்னல் இருந்தும் பயனில்லை
'யூ டர்ன்' பகுதியில் அபாயம்: சிக்னல் இருந்தும் பயனில்லை
ADDED : ஜன 04, 2024 11:37 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அருகே, பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை 'யூ டர்ன்' பகுதியில் உள்ள சிக்னல் இரவு நேரத்தில் ஒளிராததால் விபத்து அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு தனியார் பள்ளி அருகே உள்ள 'யூ டர்ன்' பகுதியில் அதிகளவு விபத்து நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதில், விபத்தில் வாகன சேதமும், அதிகப்படியான உயிரிழப்பும் ஏற்படுகிறது. இப்பகுதியில் விபத்தை தடுக்க 'பிளிங்கர்ஸ்' சிக்னல், குறுக்கு பட்டைகள் மற்றும் 'ரோடு ஸ்டட்ஸ்' போன்றவைகள் அமைக்கப்பட்டது.
விபத்தை தடுக்க, இவ்வளவு வசதிகள் செய்தும் விபத்து எண்ணிக்கை குறையவில்லை. தற்போது, கடந்த சில நாட்களாக இங்கு அமைக்கப்பட்ட 'பிளிங்கர்ஸ் சிக்னல்' இரவு நேரத்தில் ஒளிராததால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் 'யூ டர்ன்' பகுதியில் மெதுவாக செல்லாமல் வேகமாக பயணிக்கின்றனர்.
இதனால், விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, இங்கு விபத்தை தடுக்க இங்கு உள்ள சிக்னல் இரவு நேரத்தில் மீண்டும் ஒளிர செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது 'யூ டர்ன்' பகுதியை மாற்றி அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.