ADDED : ஜூன் 19, 2025 05:33 AM
இளம் பெண்ணிடம் சில்மிஷம் வாலிபர் சிறையில் அடைப்பு இளம் பெண்ணிடம் சில்மிஷம் வாலிபர் சிறையில் அடைப்பு
சூலுார் அருகே தனியாக நடந்துசென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சூலுார் அடுத்த மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த இளம் பெண், உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்த வாலிபர், அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர், பீகார் மாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர் பஸ்வான், 40, என்பதும் மயிலம்பட்டியில் தங்கி கட்டட வேலை செய்து வருவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மோட்டார் பைக் திருடியவர்கள் கைது
அன்னூர் அ.மு.காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. தனியார் மில் சூப்பர்வைசர். கடந்த 13ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் பைக்கை நிறுத்தி இருந்தார். மறுநாள் அதிகாலையில் பார்த்த போது பைக்கை காணவில்லை.
அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த எஸ்.ஐ., அழகேசன், முதல் நிலை காவலர் கருணாகரன் ஆகியோர் பைக் திருடிய பதுவம்பள்ளியைச் சேர்ந்த வினித் குமார், 22. தேக்கம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார், 26 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் கட்டட தொழிலாளிகள் எனவும், பைக்கை திருடியதும், தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது. இருவரும் அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.