/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மக்களுக்கு புல்வெட்டும் கருவி
/
பழங்குடியின மக்களுக்கு புல்வெட்டும் கருவி
ADDED : ஜூலை 31, 2025 09:49 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, பழங்குடியின மக்களுக்கு புல்வெட்டும் கருவி வழங்கப்பட்டது.
'ேஹண்ட் இன் ேஹண்ட் இந்தியா' தொண்டு நிறுவனம் சார்பில், தாத்துார் கிராம முன்னேற்ற திட்டத்தை நிர்வாக இயக்குனர் கல்பனா துவக்கி வைத்தார்.இந்த கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, திறன் அறிந்து, புல்வெட்டும் கருவி, 12 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தாசில்தார் வாசுதேவன், பயனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார். பழங்குடியின தலைவர் தங்கசாமி, தோட்டக்கலைத்துறை அலுவலர் அழகுராஜா, வட்டார இயக்க மேலாளர் ஆதிலட்சுமி, தனி வருவாய் அலுவலர் சூரியபிரபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சேர்ந்த நிர்வாகிகள் பிரபு, சுந்தரவதனம், புனிதா, முகமது ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.