/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாட்டுக்கு ஒரு தலைவன்; அசத்தும் கம்பீர குரல்
/
பாட்டுக்கு ஒரு தலைவன்; அசத்தும் கம்பீர குரல்
ADDED : நவ 06, 2024 10:24 PM
டி.எம்.சவுந்தரராஜன், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக இருந்தார். இவர், 20 ஆயிரம் திரைப்பட பாடல்களையும், 3,000த்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உட்பட 11 மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இவர், 1950களில் இருந்து 1991 வரை, தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஆண் பின்னணிப் பாடகராக விளங்கியவர். இவரது கம்பீரமான குரல் வளத்தில் வெளிவந்த பல பாடல்கள், தென்னிந்திய சினிமாவின் இரண்டு மெகா நட்சத்திரங்களான, எம்.ஜி.ஆர்., - சிவாஜி கணேசன் ஆகியோருக்கு மிகவும் பொருந்தமானதாக அமைந்தது.
கடந்த 2016ம் ஆண்டு, இந்திய அஞ்சல் துறை, இந்தியாவின் பழம் பெரும் பாடகர்கள் குறித்து 10 நினைவு அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. இதில், ஒன்றாக, டி.எம்.சவுந்தர ராஜன் குறித்து, அஞ்சல் துறையால், 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூ.5 மதிப்புள்ள அஞ்சல் தலையாகும்.
(நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்)