/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்துபாளையத்தில் சிறுத்தை? 'வாட்ஸ் ஆப்' பதிவால் பீதி
/
குளத்துபாளையத்தில் சிறுத்தை? 'வாட்ஸ் ஆப்' பதிவால் பீதி
குளத்துபாளையத்தில் சிறுத்தை? 'வாட்ஸ் ஆப்' பதிவால் பீதி
குளத்துபாளையத்தில் சிறுத்தை? 'வாட்ஸ் ஆப்' பதிவால் பீதி
ADDED : ஜன 30, 2024 12:32 AM
போத்தனூர்;குனியமுத்தூர் செங்குளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த வாரம், நாய்கள் மர்ம விலங்கால் கடித்து கொல்லப்பட்டிருந்தன. சிலர் சிறுத்தையை கண்டதாகவும், தகவல் பரவியதால் மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்தனர். விலங்குகள் நடமாட்டம் எதுவும் பதிவாகவில்லை.
இந்நிலையில், குளத்துபாளையம் அருகே அபினயா கார்டன் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டிலிருந்து நாய் ஒன்றை நேற்று முன்தினம் இரவு கவ்விச் செல்லும் காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகியதாக, அப்பகுதி வாட்ஸ் -ஆப் குழுவில் பரவியது.
மற்றொரு வீடியோ பதிவில் பேசுபவர், ''செல்வகுமார் பேசுகிறேன். லாவண்யா கார்டன் குளத்துபாளையம் அருகே, சிறுத்தை நாயை கவ்வி செல்லது போல் வீடியோ, சமுக வலைதளங்களில் பரவியுள்ளது. அதுபோல் எதுவும் இங்கு நடக்கவில்லை. இது வதந்தியே. இங்கு வரவே பயப்படுகின்றனர். இங்குள்ள கேமராக்களில் எதுவும் பதிவாகவில்லை. யாரும் பயப்பட தேவையில்லை, என கூறுகிறார்.
மதுக்கரை வனச்சரகர் அருண்குமாரிடம் கேட்டபோது, எங்களுக்கு இன்று (நேற்று) மாலைதான் தகவல் கிடைத்தது. அது போலியான பதிவாகும், என்றார்.
இதனால், மக்கள் எதை நம்புவது என தெரியாமல், குழப்பம் அடைந்துள்ளனர்.