sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தடுப்புச்சுவரில் படுத்து ஓய்வெடுத்த சிறுத்தை

/

 தடுப்புச்சுவரில் படுத்து ஓய்வெடுத்த சிறுத்தை

 தடுப்புச்சுவரில் படுத்து ஓய்வெடுத்த சிறுத்தை

 தடுப்புச்சுவரில் படுத்து ஓய்வெடுத்த சிறுத்தை


ADDED : பிப் 12, 2026 05:22 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் வன விலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் சமீப காலமாக யானையை தொடர்ந்து, சிறுத்தையும் நடமாடுகின்றன.

மலைப்பாதையில், இரவு நேரத்தில் சிறுத்தை ஹாயாக ஓய்வெடுப்பதை கண்ட வாகன ஓட்டுநர்களும், சுற்றுலா பயணியரும் பீதியடைந்தனர். புதுத்தோட்டம் ரோட்டில் இரவு நேரத்தில் தடுப்புச்சுவரில் சிறுத்தை ஹாயாக ஓய்வெடுத்தது.

வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தை பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் வெளியில் உணவு தேடுவதற்காக வரும். இது போன்ற சூழ்நிலையில், பொதுமக்கள் ரோட்டில் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், மாலை நேரத்தில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்கூடாது. மலைப்பாதை ரோட்டில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குளை கண்டால் அமைதியாக வாகனங்களை இயக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us