ADDED : பிப் 12, 2026 05:22 AM

அன்னூர்: அங்கன்வாடி ஊழியர்களுக்கு, சிறப்பு பென்ஷன் 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு, பதவியுயர்வு வழங்க வேண்டும்.
பல ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் கடந்த 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
அன்னூர் வட்டாரத்தில் 100 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான 1,000க் கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று, உணவு உண்டு வருகின்றன.
ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஒன்பதாவது நாளாக நேற்றும் பெரும்பாலான மையங்களில் கற்பித்தல் நடைபெறவில்லை. 90 சதவீதம் ஊழியர்கள், உதவியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
கோவையில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். சில மையங்களில் பெற்றோர் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
எனினும் எந்த மையத்திலும் குழந்தைகளுக்கு கற்பித்தல் நடைபெறவில்லை.
