/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய், பூனையை 'கவ்விய' சிறுத்தை; அட்டுக்கல்லில் மூன்று மாதங்களாக 'தண்ணி குடிக்கிறது' வனத்துறை

ADDED : அக் 29, 2024 09:14 PM

தொண்டாமுத்தூர், : அட்டுக்கல்லில், 3 மாதங்களுக்கு பின், மீண்டும் சிறுத்தை புகுந்து, நாய், பூனையை கொன்று வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், கடந்த, ஆக., மாதம், தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட பசுங்கன்றை, சிறுத்தை கடித்துக் கொன்றது. அதன்பின், தொடர்ந்து, அப்பகுதியில், ஆடு, நாய், பூனை, கோழி போன்றவைகளை சிறுத்தை கடித்துக் கொன்றது.
இதனையடுத்து, வனத்துறையினர், கேமரா பொருத்தியும், கூண்டுகள் வைத்தும், சிறுத்தியை பிடிக்க முயன்றனர். ஆனால், சிறுத்தை சிக்காததால், அம்முயற்சி தோல்வியடைந்தது. அதன்பின், ஓணாப்பாளையம், ஆனைமடுவு பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.
இந்நிலையில், இப்பகுதியை ஒட்டியுள்ள, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட குப்பேபாளையம், புள்ளாகவுண்டன்புதூர், வளையங்குட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், கடந்த ஒரு மாதமாக, ஆடு, நாய்களை சிறுத்தை கொன்று வருகிறது.
நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, அட்டுக்கல் மலை கிராமத்தின் முன்பு உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், சிறுத்தை புகுந்து, வீட்டின் வாசலில் இருந்த ஒரு நாய் மற்றும் 3 பூனைகளை கடித்து கொன்று, புதருக்குள் தூக்கிச் சென்று மறைந்தது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அங்கு சிறுத்தையின் கால்தடம் பதிந்திருந்ததை உறுதி செய்தனர். சிறுத்தையை கண்காணிக்க அப்பகுதியில் கேமரா பொருத்தவும், விரைவில் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.