தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை

வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை

வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை


ADDED : அக் 23, 2024 10:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 10:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அறிவொளி நகரில், வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை, சிறுத்தை கவ்வி சென்றதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வருபவர் ருக்குமணி அம்மாள், 60. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டின் முன்பு நாயை கட்டிவிட்டு உறங்கச்சென்றார். நள்ளிரவில் நாயின் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது அங்கு சிறுத்தை ஒன்று இருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த சிறுத்தை வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை கவ்விக்கொண்டு புதர் வழியாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதுகுறித்து சிறுமுகை வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us