தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேம்பாலத்தின் கீழ் மின் விளக்கு எரியல

மேம்பாலத்தின் கீழ் மின் விளக்கு எரியல

மேம்பாலத்தின் கீழ் மின் விளக்கு எரியல


ADDED : செப் 14, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள மின்விளக்குகள் இரவு நேரத்தில் எரியாததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிக்கின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக இரவு நேரத்தில் மேம்பாலத்தின் கீழ் உள்ள மின்விளக்குகள் எரியாததால், மக்கள் இரவு, 8:00 மணிக்கு மேல் ரோட்டில் நடந்தது செல்ல அச்சப்படுகின்றனர்.

மேலும், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் பலர் பதட்டத்துடன் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஏ.டி.எம்., இருப்பதால் பணம் எடுத்து செல்லும் போது, அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடர்ந்தாலும், தெரியாத அளவில் இருட்டாக உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us