தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இடியுடன் கூடிய கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடியுடன் கூடிய கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடியுடன் கூடிய கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : செப் 14, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வால்பாறையில், கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ மழை பெய்யத்துவங்கியது. ஆரம்பத்தில் மழை தீவிரமாக பெய்ததால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது.

ஆகஸ்ட் மாதம் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், சாரல்மழை மட்டுமே பெய்ததால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு மேலாக, மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, வெயில் நிலவியதால், பி.ஏ.பி.,பாசன விவசாயிகள் கவலையடைந்தனர்.

இந்நிலையில், வால்பாறையை மீண்டும் குளிர்விக்கும் வகையில், நேற்று  காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமலும், சுற்றுலாபயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமலும் தவித்தனர்.

பருவ மழை மீண்டும் தீவிரமடைந்தால் மட்டுமே, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us