/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானையால் பீதி
/
குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானையால் பீதி
ADDED : ஜூலை 09, 2025 10:05 PM

வால்பாறை; வால்பாறையில், குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் சுற்றிய ஒற்றை யானையால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறையில் சமீப காலமாக யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே முகாமிட்டு, அச்சுறுத்தி வருகிறது.
இது தவிர, தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியின் போது, வனவிலங்குகள் தாக்குவதும் வாடிக்கையாடி விட்டது. மனித -- வனவிலங்கு மோதலால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக புதுத்தோட்டம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, ரொட்டிக்கடை குடியிருப்பு பகுதி வழியாக காலை நேரத்தில் நடந்து சென்றது. யானையை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். மக்கள் நெருக்கம் மிகுந்த ரொட்டிக்கடை பகுதியில், பகல் நேரத்தில் யானை நுழைந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.