/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரங்குமுடி ரோட்டில் ஒற்றை யானை; தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்
/
குரங்குமுடி ரோட்டில் ஒற்றை யானை; தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்
குரங்குமுடி ரோட்டில் ஒற்றை யானை; தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்
குரங்குமுடி ரோட்டில் ஒற்றை யானை; தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : பிப் 13, 2025 10:02 PM
வால்பாறை; குரங்குமுடி செல்லும் ரோட்டில் ஒற்றை யானையை சென்றதால், தொழிலாளர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர்.
வால்பாறை மலைப்பகுதியில் பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக இருப்பதால், நுாற்றுக்கணக்கான யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, வாட்டர்பால்ஸ், கவர்க்கல், அக்காமலை, வெள்ளமலை, வில்லோனி, நல்லகாத்து, செலாளிப்பாறை, பச்சமலை, பெரியகல்லார், புதுத்தோட்டம், சின்கோனா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள் பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள குரங்குமுடி எஸ்டேட் செல்லும் ரோட்டில், காலை நேரத்தில் ஒற்றை யானை ஹாயாக சென்றது. தேயிலை பறிக்க சென்ற தொழிலாளர்கள், யானை ரோட்டில் நிற்பதை கண்டு, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வாகன ஓட்டுநர்கள், வாகனத்தை பின்நோக்கி நகர்த்தி, அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை செல்லும் வரை காத்திருந்தனர். காலை முதல் மதியம் வரை யானை தேயிலை காடு அருகே முகாமிட்டதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை, குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், யானைகள் எளிதில் வெளியே வருவதில்லை. இருப்பினும், பகல் நேரத்தில் தண்ணீர் தேவைக்காக ரோட்டை கடந்து, அருகில் உள்ள ஆற்றுக்கு செல்கிறது.
எனவே, குரங்குமுடி, முருகன் எஸ்டேட், ஸ்ரீராம் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்கள் இருசக்கர வாகனங்களில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். வழியில் யானை தென்பட்டால், வாகனங்களை பின் நோக்கி நகர்த்தி யானை செல்லும் வரை காத்திருக்க வேண்டும்,' என்றனர்.

