/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகலில் ஒற்றை யானை உலா; ஒதுங்கி நின்ற வாகனங்கள்
/
பகலில் ஒற்றை யானை உலா; ஒதுங்கி நின்ற வாகனங்கள்
ADDED : பிப் 06, 2025 09:39 PM

வால்பாறை; வால்பாறை அருகே, யானை ரோட்டை கடப்பதற்காக, வாகனங்களை நிறுத்தி அமைதி காத்தனர்.
வால்பாறையில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் தேயிலை காட்டில் முகாமிடும் யானைகள், தண்ணீர் குடிப்பதற்காக ரோட்டை கடந்து ஆற்றுக்கு செல்கின்றன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சோலையாறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஒற்றையானை, ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு, ரோட்டை கடப்பதற்காக வந்தது.
அப்போது ரோட்டின் இருபுறத்திலும் வந்த அரசு பஸ், இருசக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், யானை ரோட்டை கடக்க வசதியாக, வாகனங்களை நிறுத்தி அமைதி காத்தனர்.
சுற்றும் முற்றும் பார்த்த ஒற்றை யானை, முனீஸ்வரன் சுவாமி கோவில் அருகில் சென்று தேயிலை எஸ்டேட்டினுள் சென்றது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதியை சுற்றி வரும் ஒற்றையானை, யாரையும் துன்புறுத்துவதில்லை. குடியிருப்பு பகுதிக்குள் சென்றாலும் வாழைகளை மட்டும் சாப்பிட்டு செல்கிறது. யானைகளை பொதுமக்கள் துன்புறுத்தாமல் இருந்தாலே, யானை - மனித மோதல் தவிர்க்கப்படும்,' என்றனர்.

