மேம்பாலத்தில் இருந்து சொகுசு கார் மீது 'தொபுக்கடீர்'
மேம்பாலத்தில் இருந்து சொகுசு கார் மீது 'தொபுக்கடீர்'
ADDED : ஏப் 05, 2025 11:22 PM

கோவை: கோவை - அவிநாசி ரோட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து, கான்கிரீட் துண்டு விழுந்ததில், சொகுசு காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
கோவை, நஞ்சுண்டாபுரம் ரோட்டைசேர்ந்தவர் மேத்யூ செரியன்; சிட்ரா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், ரேடியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை, ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து, பீளமேடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
'பன் மால்' அருகில், கார் முன் பக்க கண்ணாடி மீது, பாலத்தின் மேலிருந்து கனமான பொருள் ஒன்று விழுந்தது.
மேத்யூ காரை ஓரமாக நிறுத்தி பார்த்தார்.
மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் துண்டு விழுந்தது தெரியவந்தது.
இதேபோல், ஒரு சம்பவம் கடந்த டிச.,2ம் தேதி நடந்தது.
அதில் ஹோப்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் மீது கான்கிரீட் கல் விழுந்து, காரில் பேனட் மற்றும் கண்ணாடி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
