/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநங்கை கொலையில் சென்னை நபர் கைது 'பறந்து' வந்து ஆளை மாற்றி கொன்ற கொடூரம்
/
திருநங்கை கொலையில் சென்னை நபர் கைது 'பறந்து' வந்து ஆளை மாற்றி கொன்ற கொடூரம்
திருநங்கை கொலையில் சென்னை நபர் கைது 'பறந்து' வந்து ஆளை மாற்றி கொன்ற கொடூரம்
திருநங்கை கொலையில் சென்னை நபர் கைது 'பறந்து' வந்து ஆளை மாற்றி கொன்ற கொடூரம்
ADDED : பிப் 03, 2024 01:27 AM

கோவை:கோவை, தெலுங்குபாளையம், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் திருநங்கை தனலட்சுமி, 39; கோவையில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சில ஆண்டு களுக்கு முன் மும்பை சென்றார்.
இவருக்கு, மருதமலை அடிவாரம், அன்னை இந்திரா நகரில் உள்ள திருநங்கை மாசிலாமணி, 33, உடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், மும்பையில் இருந்து திரும்பிய தனலட்சுமி, மாசிலாமணி வீட்டில் தங்கினார்.
கடந்த, 29ம் தேதி இரவு தனலட்சுமியை வீட்டில் விட்ட மாசிலாமணி, அவரது நண்பர் மணி என்பவரோடு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது, தனலட்சுமி, 27 இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
வடவள்ளி போலீசார் நான்கு தனிப்படை அமைத்து கொலையாளியை தேடினர். 'சிசிடிவி' கேமராவில் சந்தேகத்துக்குரிய ஒருவர் நடமாடுவது தெரிந்தது.
விசாரணையில், அவர், சென்னை, புழுதிவாக்கத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர் தினேஷ் கந்தசாமி, 38, என்பதும், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது.
மதுரையில் பதுங்கி இருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தினேஷ் கந்தசாமி, அடிக்கடி மருதமலை முருகன் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்திக்கு வந்த போது, அவரை ஒரு கும்பல் தாக்கி, பணம் பறித்து உள்ளது.
அக்டோபரில் மருதமலை வந்த தினேஷ், அந்த கும்பலை தேடிய போது, மணி, மாசிலாமணி அவரிடம் தகராறு செய்து, தினேஷ் மற்றும் அவரது பெற்றோரை தாக்கி உள்ளனர்.
இதனால் தினேசுக்கு மாசிலமாணி மீது கோபம் ஏற்பட, 29-ம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்த அவர், மாசிலாமணி வீட்டுக்கு சென்று, அங்கு தனியாக படுத்திருந்த தனலட்சுமியை, மாசிலாமணி என நினைத்து வெட்டிக் கொன்றார்.
பின் பழனியில் மொட்டை போட்டு மதுரை தப்பினார். தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர். தான் கைதான பின்னரே ஆளை மாற்றிக் கொன்றது தினேசுக்கு தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

