/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒரு நிமிட பொறுமை நம் உயிரை காக்கும்'
/
'ஒரு நிமிட பொறுமை நம் உயிரை காக்கும்'
ADDED : அக் 16, 2024 12:19 AM

கோவை : ''ஒரு நிமிட பொறுமை, நம் உயிரை காக்கும்,'' என போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் பேசினார்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த, 'விழி அவேக்' அமைப்பின் தலைமை நிர்வாகி சுரேஷ்குமார் பல்வேறு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தனது சேவைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருபவர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் விழாவை, கோவை சிறுதுளி அலுவலகத்தில் நேற்று மாலை நடத்தினார்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் பேசும்போது, “பொறுப்பு மிக்க குடிமக்கள், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களின் பின்விளைவு மோசமாக இருக்கும்.
''நமக்கு ஒன்றும் ஆகாது என, சாலையில் பயணிப்பவர்கள் விபத்துள்ளாகும் போது, அவர்களின் குடும்பமே பாதிக்கிறது. ஒரு நிமிட பொறுமை, நம் உயிரை காக்கும்,” என்றார்.
சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், “மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, சில நாட்களில் சலித்து விடும். ஆனால் சுரேஷ்குமார் சலிக்காமல் அதை செய்து வருகிறார். இது தொடர வேண்டும்,'' என்றார்.