/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காதலர் தினம் கண்டிப்பா வேணும் பாஸ்!
/
காதலர் தினம் கண்டிப்பா வேணும் பாஸ்!
ADDED : பிப் 14, 2024 02:07 AM

பிப்ரவரி 14 வந்து விட்டாலே, நம்ம பசங்க பல பேர், கையில் ரோஜாவுடன் நேரில், மலர்களை தேடத் துவங்கி விடுகின்றனர். அதெல்லாம் சரி... காதலர் தினம் ஏன் கொண்டாட வேண்டும்? நம் இளைய தலைமுறையினரிடமே கேட்டு விட்டோம்!
காதலர்களுக்கு ஒரு தினம் இருப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். அன்பை பரிமாறிக் கொள்வதற்கும், விரும்பியவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுப்பதற்கும் ஒரு தினம் வேண்டும்.
-திவ்யா,
கல்லுாரி மாணவி, ஒண்டிப்புதுார்.
காதலர் தினம் என்றாலே தவறான கருத்துக்களே பரப்பப்பட்டுள்ளன. உண்மையாக காதலிப்பவர்களே அதிகம். அவர்கள் தங்களுக்குள் ஒரு சிலவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு தனியாக ஒரு தினம் இருக்க வேண்டும்.
- டீனா மெர்லின்,
கல்லுாரி மாணவி, மேட்டுப்பாளையம்.
என்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்றால் கல்லுாரி நாட்கள்தான். காதலிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட ஒரு விஷயம். அவர்கள் இணைந்து கொண்டாட, நினைக்க ஒரு நாள் உள்ளது. அது அவர்களுக்கு தேவையே.
-பிரணவ், கல்லுாரி மாணவர்.
அனைத்து விஷயங்களுக்கும், தனித்தனியாக சிறப்பு தினங்கள் உள்ளன. ஏன் காதலுக்கும் ஒரு தினம் இருக்கக்கூடாது? அன்பை பரிமாறிக் கொள்வதற்கான பிரத்யேக தினம் இருப்பது நல்லதே.
- ஜீவிதா,
கல்லுாரி மாணவி, திருப்பூர்.
காதல் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. அவ்வாறு இல்லை. ஒரு சிலர் தவறாக நடப்பதால், அப்படி பார்க்கப்படுகிறது. உண்மையானவர்கள் அவ்வாறு இல்லை. காதலர் தினம் அவசியமே.
- - -பரணி,
கல்லுாரி மாணவர், திருப்பூர்.
ஜீவிதா

