/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்திய நேவி பள்ளி
/
வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்திய நேவி பள்ளி
ADDED : ஜன 29, 2024 12:32 AM

கோவை:நேவி சில்ட்ரன் ஸ்கூல் ஆண்டு விழா கொண்டாட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், ஐ.என்.எஸ்., அக்ரானி கமாடோர் மன்மோகன்சிங் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பள்ளி ஆண்டு மலரை வெளியிட்டார்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்கள் பார்வையாளர்களை அசத்தினர்.
மாநிலங்களின் அறுவடைத்திருவிழா சார்ந்த, சிறப்பு நடனத்தில் மாணவர்கள் அசத்தலாக ஆடினர். இப்பள்ளியின் கலை நிகழ்வுகள், வேற்றுமையில் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
கல்வி, விளையாட்டு, கலை நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஐ.என்.எஸ்., அக்ரானி கமாடோர் மன்மோகன்சிங், இயற்கை பாதுகாப்பு அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நேவி பள்ளி நலச்சங்க தலைவர் குர்ஷரன் கவுர், தலைமையாசிரியர் மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.