/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர்
/
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர்
ADDED : அக் 28, 2024 06:12 AM

கோவை,: சொந்த ஊர் செல்ல வடமாநிலத் தொழிலாளர்கள் திரண்டதால், கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அதிகளவில் இருந்தது.
தீபாவளி பண்டிகை வரும், 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு, வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும், தங்களது சொந்த ஊர் செல்ல, நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிகளவில் வந்தனர். மதியம், 12:30 மணிக்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில், முண்டியடித்துக் கொண்டு உடமைகளுடன் ஏறினர்.
ஒரு சிலர், ரயிலின் அவசரகால பாதை வழியாகவும் ஏறினர். இடம் கிடைக்காதவர்கள் அடுத்த ரயிலுக்காக காத்திருந்தனர். குழந்தைகளுடன் நீண்ட நேரம் தொழிலாளர்கள் காத்திருந்தனர்.
தொடர்ந்து வரும் நாட்களிலும் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.