/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராஸ்கட் ரோட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வருகிறது
/
கிராஸ்கட் ரோட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வருகிறது
கிராஸ்கட் ரோட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வருகிறது
கிராஸ்கட் ரோட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வருகிறது
ADDED : டிச 06, 2025 06:06 AM
காந்திபுரம்: மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து மிகுந்த சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நெருக்கடியான சூழல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ரேஸ்கோர்ஸில் கே.ஜி. தியேட்டர் எதிரே இருந்த சிறிய அளவிலான பூங்கா வளாகம் புதர்மண்டி காணப்பட்டது.
அவற்றை சுத்தப்படுத்தி, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டாரம் மற்றும் அரசு கலை கல்லுாரி ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க, இப்பகுதியில் வசதி செய்து தரப்படுகிறது. ரேஸ்கோர்ஸ் விநாயகர் கோயில் பின்புறம் உள்ள காலியிடத்தில், வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படுகிறது.
ராஜவீதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், தனியார் நிறுவன பங்களிப்பில் பன்னடுக்கு வாகன நிறுத்துடம் கட்டுவது தொடர்பாக பொறியியல் பிரிவினருடன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கள ஆய்வு செய்தார்.
காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், தனியார் பங்களிப்பில் 'மல்டிலெவல் பார்க்கிங்' ஏற்படுத்த திட்டமிட்டு, அரசு ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அவசர அவசியம் கருதி, இவ்விடத்தில் மாநகராட்சி நிதியில் பார்க்கிங் வசதி உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு திருத்திய திட்ட அறிக்கை அனுப்ப உள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பழைய மலர் அங்காடியை பயன்படுத்துவது தொடர்பாக, பொறியியல் பிரிவினருடன் கமிஷனர் ஆலோசித்தார்.

