ADDED : செப் 30, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் ; கோவை, குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ,, மணிசேகரன், நேற்று முன்தினம் கோவைபுதூர் செல்லும் வழியில், தனியார் கல்லூரிக்கு பின்புறமுள்ள கல்கி கார்டன் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை அழைத்தார். ஒருவர் தப்பியோட, சிக்கியவரிடம் விசாரித்ததில், அவர் திருவாரூரை சேர்ந்த முகுந்தன், 19 என்பதும், தற்போது கல்கி கார்டனில் வசிப்பதும், தப்பியது மேத்யூ எனவும் தெரியவந்தது.
முகுந்தனிடம், கஞ்சா 100 கிராம், மெத்தாம்பெட்டமைன் எனும் போதை பொருள், 0.26 மி.கிராம், எல்.எஸ்.டி., ஒரு பாக்கெட் உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, முகுந்தனை கைது செய்த எஸ்.எஸ்.ஐ., மணிசேகரின் புகாரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தப்பியவரை தேடுகின்றனர்.