/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்றவர் கைது
/
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்றவர் கைது
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்றவர் கைது
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்றவர் கைது
ADDED : செப் 25, 2024 12:41 AM

கோவை : ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், ரூ.2000 லஞ்சம் பெற்றதாக, கோவை மாவட்ட கருவூல கல்வி பிரிவு கண்காணிப்பாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு வெங்கட்ரமணா நகரை சேர்ந்தவர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர், 60. வடகோவையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த மே 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
தனது கிராஜுவிட்டி தொகையை பெறுவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கருவூல அலுவலக கல்வி பிரிவில் விண்ணப்பித்தார். கல்வி பிரிவு கண்காணிப்பாளர் ராஜா, கிராஜுவிட்டி தொகை பில்லை 'பாஸ்' செய்ய, ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
பணத்தை எடுத்து வருவதாக கூறிச் சென்ற சிரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய, ரூபாய் நோட்டுக்களை, சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டரிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.
அவர் நேற்று மாலை, கருவூல அலுவலகத்திற்கு சென்று ராஜாவை சந்தித்தார். பணம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். ராஜா தனது மேஜை டிராயரை திறந்து, அதில் பணத்தை போடும் படி கூறினார். பணத்தை உள்ளே போடும் போது, வெளியே தயாராக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து, ராஜாவை சுற்றி வளைத்தனர். பின், போலீசார் ரசாயன சோதனை மேற்கொண்டு, ராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.