/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றவர் கைது

ADDED : செப் 25, 2024 08:18 PM

கோவை:கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு வெங்கட்ரமணா நகரைச் சேர்ந்தவர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர், 60. வடகோவை அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி மே 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். கிராஜுவிட்டி தொகையை பெறுவதற்காக, கருவூலத்தின் கல்விப் பிரிவில் விண்ணப்பித்தார். கல்விப் பிரிவு கண்காணிப்பாளர் ராஜா, கிராஜுவிட்டி தொகை பில்லை, 'பாஸ்' செய்ய, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்ற சிரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய, 2,000 ரூபாய் நோட்டுக்களை, சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பினர்.
நேற்று முன் தினம் மாலை, கருவூல அலுவலகத்துக்குச் சென்று ராஜாவை சந்தித்தார். பணம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். ராஜா தனது மேஜை டிராயரை திறந்து, அதில் பணத்தை போடும் படி கூறினார்.
பணத்தை உள்ளே போடும் போது, வெளியே தயாராக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து, ராஜாவை சுற்றி வளைத்தனர். பின், போலீசார் ரசாயன சோதனை மேற்கொண்டு, ராஜாவை கைது செய்தனர்.