/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணிடம் சில்மிஷம் ஒருவர் சிறையிலடைப்பு
/
பெண்ணிடம் சில்மிஷம் ஒருவர் சிறையிலடைப்பு
ADDED : டிச 31, 2024 04:58 AM
கோவை : கோவையைச் சேர்ந்த, 18 வயது பெண் ஒருவர், அவரது தாயாருடன் நேற்று முன்தினம் மதியம் சிவானந்தா காலனியில் இருந்து, தண்டு மாரியம்மன் கோவில் வழியாக செல்லும் அரசு பஸ்ஸில் பயணம் செய்தார்.
அப்போது இளம்பெண்ணின் பின் இருக்கையில், பயணித்த 42 வயது மதிக்கத்தக்க நபர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதுகுறித்து பெண் தனது தாயாரிடம் தெரிவித்தார். பெண்ணின் தாயார் அந்நபரை திட்டினார். அந்நபர் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டலும் விடுத்துள்ளார்.
சக பயணிகள் அந்நபரை பிடித்து, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்நபர், பொள்ளாச்சி, உடுமலை ரோடு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ரவி, 42 எனத் தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.