/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சுய ஒழுக்கம் இல்லாதவரால் வாழ்வில் முன்னேற முடியாது'
/
'சுய ஒழுக்கம் இல்லாதவரால் வாழ்வில் முன்னேற முடியாது'
'சுய ஒழுக்கம் இல்லாதவரால் வாழ்வில் முன்னேற முடியாது'
'சுய ஒழுக்கம் இல்லாதவரால் வாழ்வில் முன்னேற முடியாது'
ADDED : ஜூன் 25, 2025 11:15 PM

போத்தனூர்; கோவைபுதூர் வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா, 'கனவு மெய்ப்பட- 2025', என்ற பெயரில் நேற்று கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமையில் நடந்தது.
இதில், முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி பேசியதாவது:
பெற்றோரின் தியாகத்தை, எந்த காலத்திலும் மறக்கக் கூடாது. மொபைல்போனை தொடும் முன் எதற்காக அதனை பயன்படுத்துகிறோம் என சிந்தித்து, பயன்படுத்த வேண்டும். அறிமுகம் இல்லாதவரோடு, பேஸ்புக்கில் பழகாதீர். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். சுய ஒழுக்கமில்லாதவரால் வாழ்வில் முன்னேற முடியாது.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக வி.எல்.பி., ஜானகியம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜெயஸ்ரீ வரவேற்றார். மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். துணை முதல்வர் வாசுதேவன் நன்றி கூறினார்.