/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெரிசலான நஞ்சுண்டாபுரம் ரோட்டை நான்கு வழிப்பாதையாக மாற்ற மனு
/
நெரிசலான நஞ்சுண்டாபுரம் ரோட்டை நான்கு வழிப்பாதையாக மாற்ற மனு
நெரிசலான நஞ்சுண்டாபுரம் ரோட்டை நான்கு வழிப்பாதையாக மாற்ற மனு
நெரிசலான நஞ்சுண்டாபுரம் ரோட்டை நான்கு வழிப்பாதையாக மாற்ற மனு
ADDED : ஜன 02, 2024 02:15 AM
கோவை;போத்தனுார் ரயில்வே திருமண மண்டபம், நஞ்சுண்டாபுரம் ரோட்டை நான்கு வழி பாதையாக மாற்ற, நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவுக்கு அனுப்பியுள்ள மனு:
ரயில்வே திருமண மண்டபம் முதல், சர்ச் ரோடு வரை நான்கு வழிப்பாதையாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாற்றவில்லை.
அப்பாதையில், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. உக்கடம் - ஆத்துப்பாலம் பணிகளால், மதுரையில் இருந்து வரும் வாகனங்கள், போத்தனுார் வழியாக வருகின்றன.
குறிச்சி பிரிவிலிருந்து போத்தனுார் வரை நான்கு வழிப்பாதை பணிகள் நடப்பதால், நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வாகன நெரிசல் அதிகம் உள்ளது.
இந்த ரோடு குறுகியதாக இருப்பதால், நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாம் முனையமாக மாற்றப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ரயில் பயணிகளின் வருகை அதிகரிக்கும். ஆகவே, இந்த ரோட்டை நான்கு வழி ரோடாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

