/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோரத்தில் மண் குவியல்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
/
சாலையோரத்தில் மண் குவியல்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
சாலையோரத்தில் மண் குவியல்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
சாலையோரத்தில் மண் குவியல்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
ADDED : செப் 22, 2024 11:45 PM

வால்பாறை : வால்பாறையில், சாலையோரங்களில் விதிமீறி கொட்டப்பட்டுள்ள மண் குவியலால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
வால்பாறை நகரில், புதிதாக கட்டுமான பணிகள் நடக்கிறது. இந்நிலையில், பழைய கட்டடக்கழிவுகளை லாரியில் கொண்டு வந்து, பொள்ளாச்சி சாலையின் ஓரத்தில் குவிக்கின்றனர்.
இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாததால், சாலையோரங்களில் மண் உள்ளிட்ட கட்டட கழிவு குவிப்பது அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில், விதிமுறை மீறி பல அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய கட்டடங்கள் கட்டும் போது, பழைய கட்டடக்கழிவு மண்ணை, பொள்ளாச்சி செல்லும் சாலையின் ஓரத்தில் குவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் நிலையில், மண் குவியலால் பாதிப்பு ஏற்படுகிறது.
மழை பெய்யும் போது, அந்த மண் சாலையில் தேங்குகிறது. வெயில் காலத்தில் காற்றடிக்கும் போது, மண் துகள் பறக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கட்டடக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். கழிவு மண் கொட்டும் லாரியை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.