/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான செஸ் போட்டியில் திறமையை காட்டிய வீரர், வீராங்கனை
/
மாநில அளவிலான செஸ் போட்டியில் திறமையை காட்டிய வீரர், வீராங்கனை
மாநில அளவிலான செஸ் போட்டியில் திறமையை காட்டிய வீரர், வீராங்கனை
மாநில அளவிலான செஸ் போட்டியில் திறமையை காட்டிய வீரர், வீராங்கனை
ADDED : ஜூலை 16, 2025 10:42 PM

கோவை; மாநில அளவிலான செஸ் போட்டியில், 9, 12, 15 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில், 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
மாவட்ட செஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான ஒரு நாள் செஸ் போட்டி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதில், கோவை, சென்னை, தேனி, நீலகிரி உட்பட, 16 மாவட்டங்களை சேர்ந்த, 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஓபன் பிரிவு மற்றும் ஆண்கள், பெண்கள் பிரிவில், 9, 12 மற்றும் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டி நடந்தது. 9 வயதுக்குட்பட்ட வீராங்கனை பிரிவில் கோவையை சேர்ந்த ரியா, வீரர்கள் பிரிவில் திருப்பூரை சேர்ந்த விசாகன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
அதேபோல், 12 வயதுக்குட்பட்ட வீரர்கள் பிரிவில், கோவையை சேர்ந்த மிதுன் இரையன்பு, வீராங்கனைகள் பிரிவில், திருப்பூரை சேர்ந்த சுதர்ஷனா, 15 வயதுக்குட்பட் வீரர்கள் பிரிவில் இஷாசாதன், 15 வயதுக்குட்பட்ட வீரர்கள் பிரிவில் கோவையை சேர்ந்த அகிலன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
ஓபன் பிரிவில், 101 பேர் மொத்தம் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகைக்கு போட்டியிட்டனர். முதல் பரிசாக ரூ.4,500, இரண்டாம் பரிசாக ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட்டது. 9 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் பிரிவில், 16 முதல், 20ம் இடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்ட செஸ் சங்க செயலாளர் தணசேகர், பொருளாளர் வினோத்குமார் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.