/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட கழிவுகள் கொட்டும் மையமாக மாறிய குட்டை
/
கட்டட கழிவுகள் கொட்டும் மையமாக மாறிய குட்டை
ADDED : நவ 19, 2025 03:55 AM

உடுமலை: உடுமலை குட்டைத்திடல், கட்ட கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை நகரின் மத்தியில் அமைந்துள்ள குட்டைத்திடலில், மாரியம்மன் கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதோடு, நுாலகம், போலீஸ் ஸ்டேஷன், மசூதி, நாராயணகவி மணி மண்டபம், காந்தி சிலை, நகராட்சி வணிக வளாகம் என பிரதான பொது இடமாக உள்ளது.
ஏற்கெனவே, வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள், நகராட்சி கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக கட்டட கழிவுகள், லாரிகள் வாயிலாக கொண்டு வந்து தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு, மலைபோல் குவிக்கப்பட்டுள்ள கட்டடக்கழிவுகளால், வாகனங்கள் நிறுத்த முடியாததோடு, மழைக்காலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கட்டடக்கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

