/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டின் நடுவே பள்ளம் மக்கள் திக்திக் பயணம்
/
ரோட்டின் நடுவே பள்ளம் மக்கள் திக்திக் பயணம்
ADDED : மே 04, 2025 09:58 PM

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி, தெப்பக்குளம் வீதியில் ரோட்டின் நடுவே பெரும் பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து ஆழியாறு செல்லும் வாகனங்கள், தெப்பக்குளம் வீதி வழியாக கோட்டூர் ரோடுக்கு செல்கின்றன. அதே போன்று, ஆழியாறு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள், வால்பாறையில் இருந்து வரும் வாகனங்கள் கோட்டூர் ரோடு வழியாக தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணன் வீதி வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றன.
இந்நிலையில், மாரியம்மன் கோவில் அருகே தெப்பக்குளம் வீதியில், பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தெப்பக்குளம் வீதியில் பெரும் பள்ளம் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளத்தில் இறங்கி செல்வதால் பழுது ஏற்படுகிறது. பள்ளம் இருப்பதை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
முக்கிய வழித்தடத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன் அதிகாரிகள் விழித்தெழ வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.