/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அலுவலக நுழைவாயிலில் காத்திருப்பு: வருவாய்துறை அலுவலர் போராட்டம்
/
அலுவலக நுழைவாயிலில் காத்திருப்பு: வருவாய்துறை அலுவலர் போராட்டம்
அலுவலக நுழைவாயிலில் காத்திருப்பு: வருவாய்துறை அலுவலர் போராட்டம்
அலுவலக நுழைவாயிலில் காத்திருப்பு: வருவாய்துறை அலுவலர் போராட்டம்
ADDED : பிப் 22, 2024 10:46 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின்படி, அடிப்படையில் விதித்திருந்த உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும். துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.அனைத்து தாலுகாக்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென, புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
இவை உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட போராட்டமாக, கடந்த, 13ம் தேதி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில், 25 பேர் பங்கேற்றனர்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும், 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்,' என்றனர்.
* உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்கள் முன்பாக, கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.