/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கில் தேடப்பட்ட 'குத்தாட்ட' மத போதகர் கைது
/
போக்சோ வழக்கில் தேடப்பட்ட 'குத்தாட்ட' மத போதகர் கைது
போக்சோ வழக்கில் தேடப்பட்ட 'குத்தாட்ட' மத போதகர் கைது
போக்சோ வழக்கில் தேடப்பட்ட 'குத்தாட்ட' மத போதகர் கைது
ADDED : ஏப் 13, 2025 11:39 PM

கோவை : போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த கிறிஸ்துவ மத போதகரை, போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.
கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ், 37. தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இஸ்லாமியராக பிறந்தவர். சதர்ன் ஏசியா பைபிள் கல்லுாரியில் படித்து, கிறிஸ்துவ மத போதகர் ஆனார்.
14 - 17 வயது சிறுமியர்
கோவை நகரில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்து, கோவையிலேயே வசித்தார். கொரோனா காலத்தில், ஆன்லைனில் ஆராதனை நடத்தினார். காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், எட்வின் ரூசோ என்பவரின் இடத்தில், 'கிங்ஸ் ஜெனரேஷன் சபை' என்ற பெயரில் சர்ச் துவங்கினார்.
மக்களை கவர, கீ போர்டு சகிதம் குத்தாட்டம் போட்டு, புதிய ஸ்டைலில் போதிக்கும் வழியை கையாண்டதால், சமூகவலைதளங்களில் பிரபலமானார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் ஜெபக்கூட்டம் நடத்தினார்.
தொடர் புகார்கள் காரணமாக, கடந்த அக்டோபரில், கிராஸ்கட் ரோடு அரசன் டவரில் இருந்து காலி செய்தார். கடந்த ஆண்டு மே 21ல், இவர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற, 17 மற்றும் 14 வயது சிறுமியரிடம், பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
சிறுமியரின் பெற்றோர் புகாரில், கோவை மாநகர மத்திய மகளிர் போலீசார், ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிந்தனர். இதையறிந்த ஜான் ஜெபராஜ் தலைமறைவானார்.
அவரை பிடிக்க, கோவை ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன், காட்டூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மதுரை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம், மூணாறில் தேடி வந்தனர்.
சுற்றிவளைப்பு
கேரள மாநிலம், மூணாறில், ஒரு ரிசார்ட் அருகில் உள்ள வீட்டில், ஜான் ஜெபராஜ் பதுங்கியிருப்பது உறுதியானதால், அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கோவை அழைத்து வரப்பட்ட ஜான்ஜெபராஜ், சிறையில் அடைக்கப்பட்டார். வேறு பெண்கள், சிறுமியர் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க, ஜான் ஜெபராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.