/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிட்கோவில் தொங்குகிறது ஒரு சாலை; தொழிலாளர்கள் தினமும் அவஸ்தை
/
சிட்கோவில் தொங்குகிறது ஒரு சாலை; தொழிலாளர்கள் தினமும் அவஸ்தை
சிட்கோவில் தொங்குகிறது ஒரு சாலை; தொழிலாளர்கள் தினமும் அவஸ்தை
சிட்கோவில் தொங்குகிறது ஒரு சாலை; தொழிலாளர்கள் தினமும் அவஸ்தை
ADDED : டிச 03, 2024 06:47 AM

போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் அடுத்து மாநகராட்சியின், 97வது வார்டில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது.
இங்கு மதுக்கரை மார்க்கெட் சாலையை ஒட்டி, செட்டியார் தோட்டம் என அழைக்கப்பட்ட பகுதி சுமார், 20 ஆண்டுகளுக்கு முன் மனைகளாக பிரிக்கப்பட்டு, தற்போது தொழிற்சாலைகள் உள்ள பகுதியாக மாறிவிட்டது.
இவ்விடத்தை மனைகளாக பிரித்தவர், சிட்கோ பிரதான சாலை -- மதுக்கரை மார்க்கெட் சாலையை இணைக்கும் விதமாக, 30 அடி அகல சாலையாக அமைத்தார். பின் இச்சாலை, உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன், மதுக்கரை மார்க்கெட் சாலை விரிவுபடுத்தப்பட்டது.
அப்போது முதல் இச்சாலை, மழைநீர் வடிகாலின் மேற்பகுதியில் கல்வெர்ட்டுடன் துண்டிக்கப்பட்டு அந்தரத்தில் நிற்கிறது. இச்சாலையிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்,மாற்று வழியை பயன்படுத்தி வரும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க, மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை மாற்றம் கிடையாது.
மாநகராட்சி மனது வைத்தால், தொழிலாளர்களின் பிரச்னைக்கு விடிவு பிறக்கும். மாநகராட்சி கமிஷனர் கண்டுகொள்வாரா?