sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரு ரோஜாவின் விலை ரூ.100! காதலை சொல்வதென்றால் சும்மாவா

/

ஒரு ரோஜாவின் விலை ரூ.100! காதலை சொல்வதென்றால் சும்மாவா

ஒரு ரோஜாவின் விலை ரூ.100! காதலை சொல்வதென்றால் சும்மாவா

ஒரு ரோஜாவின் விலை ரூ.100! காதலை சொல்வதென்றால் சும்மாவா


UPDATED : பிப் 14, 2024 06:11 AM

ADDED : பிப் 14, 2024 01:44 AM

Google News

UPDATED : பிப் 14, 2024 06:11 AM ADDED : பிப் 14, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு, நேற்று ஒரு ரோஜா 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் முன்பெல்லம் காதலர் தினத்துக்கு, முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. இப்போது இங்கும் காதலர்கள் காதலர் தினத்தை, சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. முதன் முதலில் காதலை சொல்பவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், புதிதாக திருணம் செய்து கொண்ட தம்பதிகள் என, பலரும்மலர்க்கொத்து, பரிசுகள் வழங்கி ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று, ரோஜா பூக்கள் மற்றும் பூங்கொத்துக்கள் விற்பனை சூடு பிடிப்பது வழக்கம். விலையும் அதிகரிக்கும்.

இன்று காதலர் தினம் என்பதால், வழக்கமாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ரோஜா பூ, நேற்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஜிகினா பேப்பரில், பேக் செய்யப்பட்ட ஒற்றை ரோஜா,80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ரோஜா மலர்க்கொத்து மற்றும் ரோஜா மலர் செண்டுகள், 300 ரூபாய் முதல் 1,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

கடைகளில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு, இளம் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் ரோஜாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதில் சிவப்பு நிற ரோஜாக்களைதான், இளைஞர்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us