/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அர்ப்பணிப்பு உணர்வுக்கு ஒரு 'ராயல் சல்யூட்'
/
அர்ப்பணிப்பு உணர்வுக்கு ஒரு 'ராயல் சல்யூட்'
ADDED : நவ 01, 2024 12:29 AM

உலக சுகாதார அமைப்பு, 2020ம் ஆண்டு ஜன., 30 ம் தேதி, பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. 2020ம் ஆண்டு பிப்., 11ம் தேதி 'கோவிட்' வைரஸ் பரவுவது சம்பந்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2020 மார்ச் 11ம் தேதி, இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவியதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில், 2020 மார்ச் 25ம் தேதி நள்ளிரவில் இருந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அரசின் சார்பில் நோய் பரவல் தடுக்கவும், பொதுமக்கள் சிரமமின்றி பொது முடக்கத்தை சமாளிக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர், முதல் நிலையில் நின்று, மக்களுக்கு நோய் குணப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் உதவி செய்தனர். இவர்கள், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்தனர்.
போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள், சுகாதார துறை ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தரைவழி போக்குவரத்து, ரயில், விமானப் போக்குவரத்து, வங்கி, தபால் துறை என, பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தவர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக, கோவிட் தொற்றைசரியாக கையாள முடிந்தது. இவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாகவும், தன்னலமில்லா சேவையை கவுரவிக்கும் விதமாகவும், இந்திய அஞ்சல் துறை, 4 சிறப்பு அஞ்சல் தலைகளை, 2020ம் ஆண்டு வெளியிட்டது.

