/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூரில் ஆனி நாற்று நடவு உற்சவம்
/
பேரூரில் ஆனி நாற்று நடவு உற்சவம்
ADDED : ஜூன் 29, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கிய ஸ்தலமாக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இத்தலத்தில், ஆண்டுதோறும், ஆனி மாதத்தில் நாற்று நடவு உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா, கடந்த, 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாள்தோறும் காலையில், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளலும், மாலையில் ஸ்ரீ கேதாரீஸ்வரர் எழுந்தருளலும் நடந்து வருகிறது. இவ்விழாவின் ஒன்பதாம் நாளான, வரும், ஜூலை 1ம் தேதி, பொன்னேர் பூட்டி உழுது, நாற்று நடும், ஆனி நாற்று நடவு திருவிழா வெகு சிறப்பாக நடக்க உள்ளது. திருவிழாவின், பத்தாம் நாளில், ஆனி திருமஞ்சனம் நடக்கிறது.